ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ள 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று வியாழக்கிழமை (19) கைச்சாத்திடப்பட்டது.
இந்த கடனுதவியை இலங்கை அரசாங்கத்தின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு வழங்குவது குறித்து கடந்த ஒக்டோபர் மாதம் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்த கடனுதவியின் ஊடாக இலங்கை மின்சார சபையை மேலும் அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கடனுதவியின் ஊடாக நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.