பீடி இலைகளை லொறியில் கடத்திச் சென்ற இருவர் கைது!

13 0

புத்தளம், வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் பீடி இலைகளை லொறியில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் பொல்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த லொறி ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.

இதன்போது இந்த லொறியானது பொலிஸ் உத்தரவையும் மீறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் சிலர் இந்த லொறியை துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தானை மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 மற்றும் 33 வயதுடையவர்கள் ஆவர்.

இந்த லொறியிலிருந்து 1,204 கிலோ பீடி இலைகள் அடங்கிய 43 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.