நல்லிணப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான வலயமட்டச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்திலும், வவுனியாவில் குருமன்காட்டிலும் இடம்பெற்று வருகின்றன.
உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறுதல், காணாமற்போனமை, இழப்பீடு வழங்குதல் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைப்படுகிறது.
இதேவேளை வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குறித்த குழுவினர் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.
அந்தவகையில் ஜுலை 9 ஆம் திகதி குறித்த குழுவினர் தமது செயற்திட்டங்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளை கொழும்பில் ஆரம்பித்தனர்.
கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 19ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கைகளை சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான குழுவின் முன்னெடுத்து வந்தநிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
ஸ்ரீலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளை ஆரம்பித்த குறித்த குழுவினர் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடமும் கருத்துக்கைளை பெற்று வருகின்றனர்.