பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் மரணம்

23 0

காலியில் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் மாபலகம நோக்கி சென்ற பேருந்திலேயே நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மாபலகமவில் இருந்து காலிக்கு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 40 முதல் 50 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.