ஹரிணியின் வகுப்பறையில் கல்வி கற்ற சஜித் பிரேமதாச

15 0

பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) விரிவுரையாளராக இருந்த காலப்பகுதியில் தான் அவரது வகுப்புக்களில் கலந்து கொண்டு கல்வி கற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் நேற்று(18.12.2024) சமர்ப்பித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.

தாம் ஒருபோதும் பொய்யான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்.

தனது கல்வித் தகுதி உண்மையா பொய்யா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விசாரித்து உறுதி செய்ய முடியும்.

 

தனது வெளிநாட்டுப் படிப்பிற்குப் பிறகு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

அங்கு சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

அப்போது விரிவுரையாளராக இருந்த தற்போதைய பிரதமரின் வகுப்புகளில் கூட கலந்து கொண்டேன்” என்றார்.