விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

10 0

ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 – 43 வயதுக்கிடைப்பட்டவர்கள்.

சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.