சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்

12 0

சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சைப்ரஸில் பணிபுரியும் இந்நாட்டு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து சமூக பாதுகாப்பு நிதியாக பெறப்படும் பணம் அவர்களுக்கு மீள வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி உரிய பணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்