திடீர் விபத்துக்கள் அதிகரிப்பு

10 0

பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் திடீர் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்கள், நீரில் மூழ்கி உயிரிழத்தல், விலங்குகள் கடித்தல் மற்றும் உணவு விஷம் காரணமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க இதனைத் தெரிவித்திருந்தார்