நான் கல்வி கற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக சகல குடிமகனாலும் பரிசீலித்துப் பார்க்க முடியும்.
நான் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது நிரூபிக்கப்பட்டால், எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி போலவே அரசியலில் இருந்தும் விலகுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாலர் பாடசாலை முதல் பட்டப்படிப்பு வரை பெற்றுக்கொண்ட கல்விச்சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கென்ரிசர்ட் கொன்வன்ட்டில் நான் முன்பள்ளி பாடசாலைக்கு சென்றேன். பின்னர் ஷான்த தோமஸ் ஆரம்ப வித்தியாலயத்துக்கு சென்றேன்.
அதன் பின்னர் ராேயல் கல்லூரிக்கு சென்றேன். இந்த நாட்டில் நான் சாதாரண தர பரீட்சைக்கு முகம்கொடுக்கவில்லை. ராேயல் கல்லூரியில் சிரேஷ்ட தலைவராக சிறிது காலம் செயற்பட்டேன்.
அதன் பின்னர் இங்கிலாந்தில் மில்ஹில் வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். அங்கு சாதாரண பரீட்சைக்கு முகம்கொடுத்து சித்தியடைந்தேன்.
அதாவது நான் லண்டல் கல்வி பொதுத் தராத சாதாரண பரீட்சையே எழுதினேன். அதேபோன்று மில்ஹில் வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சையில் தோற்றி 2பீ, 2சீ பெறுபேறு இருக்கிறது. அந்த பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு இங்கிலாந்தில் பட்டப்படிப்பை கற்றேன்.
அதன் பின்னர் அமெரிக்காவில் முதுமாணி பட்டத்தை தொடர்வதற்கு தெரிவாகினேன்.என்றாலும் எனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நாட்டுக்கு வர தீர்மானித்தேன்.
அதனால் முதுமாணி பட்டப்படிப்பை பூரணப்படுத்த முடியாமல் போனது அமெரிக்காவில் முதுமாணி பட்டப்படிப்பை கற்றுகும்போது அதன் செனட்பை உறுப்பினரிடம் தொண்டராக சேவை செய்தேன்.
பின்னர் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த நிலையில் 2021,2022 ஆம் ஆண்டுகளில் நான் திறந்த பல்கலைக்கழகத்துக்கு பிரவேசித்தேன். அது எனது முதுமாணி பட்டப்படிப்பை தொடர்வதற்காகும்.
அங்கு தற்போதைய பிரதமர் ஹரினி அமரசூரிய நடத்திய பல வேலைத்திட்டங்களில் நான் கலந்துகொண்டேன். பிரதமர் சிறந்த ஆசிரியை. என்றாலும் அரசியல் நடவடிக்கை காரணமாக கற்பித்தல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வது சிரமான அமைந்தது. மேலும் யாராவது கேள்வி கேட்டால் காண்பிப்பதற்கு நான் எனது பிறப்புச்சான்றிதழையும் கொண்டுவந்தேன்.
எனது கல்வித் தகைமைகளுக்கு சவால் விடுத்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவும், நான் சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறவில்லை என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரசாரம் மற்றும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் எனது கல்விச்சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தேன்.
ஆரம்பக் கல்வி முதல் திறந்த பல்கலைக்கழகத்தின் முதுமாணி கற்கை வரையிலான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன்.
நான் கல்வி கற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக சகல குடிமகனாலும் பரிசீலித்துப் பார்க்க முடியும்.
நான் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தது நிரூபிக்கப்பட்டால், எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி போலவே அரசியலில் இருந்தும் விலகுவேன் என்றேன்.