தொடரும் Help For Smile இன் நிவாரணப் பணிகள்.

25 0

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று 18/12/2024 பட்டி தோட்ட கிராமத்தில் 20 குடும்பத்தினருக்கும் தரவங்கோட்டை கிராமத்தில் 25 குடும்பத்தினரிற்கும் உலர் உணவு வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவலப்படும் 50 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.