வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைக்கம் பணி முன்னெடுப்பு!

19 0

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.   

குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனால் அந்த பாதையில் வாகனநெரிசலும் ஏற்ப்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்ட வவுனியா நகரசபை அந்தவீதியின் முகப்புபகுதியில் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, இன்று புதன்கிழமை (18)  அங்கு மரக்கறி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டனர்.