தியத்தலாவை பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது !

10 0

தியத்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெல பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட  சந்தேக நபர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளினால்  அளுத்வெல பகுதியில் சோதனை நடத்திய போது  அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரவளை பகுதியைச்  சேர்ந்த 46 வயதுடையவராவர்.

மேலும், குறித்த கைது நடவடிக்கை  தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.