தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இணையத்தளம் செயலிழந்துள்ளதா?

12 0
இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் தொடர்ந்து செயற்படுகிறது என்பதையும் அத்தளத்தில் உள்ள E-Submission பிரிவு ஒரு தற்காலிக பிரிவு என்பதால் அது செயலிழந்துள்ளது என்பதையும் இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளம் செயலிழந்துள்ளதாக சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

குறிப்பாக ‘அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் E-Submission பிரிவு செயலிழந்துள்ளது.

இதனால் வெளிப்படைத்தன்மையும் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படுகின்றன’ என அப்பதிவுகளில் கூறப்பட்டிருந்தன.

இந்நிலையில் இதுபற்றி இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் Fact Seeker ஆராய்ந்துள்ளது.

அதன்படி, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் இணையதளம் தொடர்ந்து செயற்படுவதாகவும் குறித்தE-Submission பிரிவு ஒரு தற்காலிக பிரிவு என்றும் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இப்பிரிவு மாறுபட்ட துறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை இணைய வழியில் ஒருங்கிணைக்க பயன்படுத்தபட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவ்வதிகாரிகள், அப்பிரிவு மாத்திரமே செயலிழந்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளனர்.