அரியாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்விடத்தில் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு, சிலிண்டர், 60 ஆயிரம் லீட்டர் கோடா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸார் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.