ஹட்டன் – போடைஸ் பகுதியில் உடல்பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தை மீட்பு

11 0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டம் பகுதியில் இன்று புதன்கிழமை (18) சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தையின்  தலைப்பகுதி மற்றும் நான்கு கால்கள் உடலிலிருந்து  வெட்டப்பட்டுள்ளதாக அவதானித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.