2024 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாக்கள் கசிந்தமை குறித்த விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை (டிசம்பர் 19) காலை 09.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.