போதைப்பொருளுடன் யாத்திரை வந்த இளைஞன் கைது

11 0

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட  மெனிக்கே ரயிலில், இன்னொரு குழுவுடன் வந்துள்ளதாகவும்  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.