இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் இருந்து இலங்கைக்கு, கடல் வழியாக கடத்துவதற்காக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் மதிப்பிலான 450 கிலோ கிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு கடல் அட்டைகள் அடங்கிய மூட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை, மரைக்காயர்பட்டினம், களிமண்குண்டு, குந்துகால் உள்ளிட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலைகள் பண்டல்கள், கஞ்சா, மெத்த பெட்டன் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(17) அதிகாலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு பொலிஸாருக்கு மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள வீடொன்றில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது