துபாய் நகரம் செல்வ செழிப்புமிக்கது. இந்த நாட்டின் ஆடம்பரம் வளர்ந்த நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா இதற்கு சான்று. அங்கு வசிக்கும் துபாய் ‘ஷேக்’குகளின் பகட்டான வாழ்வும் மற்றவர்களை வாயை பிளக்கவே செய்யும். தற்போது துபாயில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் வெள்ளை நிற அங்கி மற்றும் தலைப்பாகை என பாரம்பரிய உடையணிந்த 2 ஆண்கள் சாலையோர டீக்கடையில் உட்கார்ந்தபடி டீ குடிக்கிறார்கள். அப்போது சொகுசு கார் ஒன்று ஒருபக்கமாக சாய்ந்தபடி அவர்கள் அருகே ஓடி சாகசத்தில் ஈடுபட்டு செல்கிறது.
அப்போது அதே காரில் மறுபக்கமாக இருந்த 2 பேர் தங்களுடைய உடலை வெளியே நீட்டி டீ கோப்பைகளை உயர்த்தி காட்டியவாறு செல்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி 7½ கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 20 லட்சம் ‘லைக்’குகளை குவித்து காட்டுத்தீப்போல பரவி வருகிறது.