பிரபல ஹாலிவுட் நடிகை டயேன் டெலனோ புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். நார்தன் எக்ஸ்போஷர், பாப்புலர் மற்றும் தி விக்கர் மேன் போன்ற தொடர்களில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், 67 வயதான டயேன் தனது இல்லத்தில் உயிரிழந்ததாக டெட்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.1990 முதல் 1995 வரையிலான காலக்கட்டத்தில் ஆறு சீசன்கள் வரை வெளியான நார்தன் க்ஸ்போஷர் தொடரில் டெலானோ பார்பரா செமான்ஸ்கி என்ற கதாபாத்திரத்தில நடித்தார்.
இது இவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. இதுதவிர இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.1957, ஜனவரி 29ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் பிறந்த டெலானோ தனது ஆறு வயது முதலே நடித்து வந்தவர் ஆவார். தனது திரைப்பயணத்தில் இவர் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொடர்கள் மற்றும் திரைப்பட கதாபாத்திரங்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.