பெல்சியத்தில் நடைபெற்ற “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு

38 0

தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் ஆசானாகவும்,தத்துவ ஆசிரியராகவும் இருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் “தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்- பாளராகவும்”தமிழீழ மக்களின் மனங்களில் புன்னகை மாறமல் வலம் வந்த “பிரிகேடியர்”தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களதும் வீரவணக்க நினைவெழிச்சி நாளானது நினைவு கூரப்பட்டது.

16.12.2024 அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்பன் மானிலத்தில் பி.பகல் 6.30 மணிக்கு முதன்மையாகப்பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ,தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல்,ஈகைச்சுடர் ஏற்றல்,மலர் வணக்கம் ,அகவணக்கம் இடம் பெற்றதைத்தொடர்ந்து எழிச்சி நிகழ்வுகள் இடம் பெற்று ,தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”என்ற பாடலுடன் “தமிழரின் தாகம் தழீழத்தாயகம் ” என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.