அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

24 0
image
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும்; மாணவன் ஒருவனும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17 வயது மாணவியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபுடன் லைவ் கிறிஸ்தவ பாடசாலையில் கற்றலில் ஈடுபட்டிருந்தவரே தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டவரும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.