வவுனியாவில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது !

20 0

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புளியங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 03 உள்நாட்டுத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.