மரத்தின் கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

22 0
அநுராதபுரம், ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றின் முற்றத்திலிருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பாலர் பாடசாலை சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16 ) இடம்பெற்றுள்ளது.

ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 05 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் பாலர் பாடசாலையின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மரத்தின் கிளை ஒன்று மாணவன் மீது முறிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்த சிறுவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.