வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கீர்த்தி பண்டாரபுற பிரதேசத்தில் மண்ணெண்ணெய்க்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது விவசாயக் கருவிகளை இயங்கவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசத்தில் அதிகமானோர் விவசாயத்தையே பிரதான ஜீனோபாயமாகக் கொண்டவர்கள். அவர்கள் காய்கறி மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைகளில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நீர் இரைக்கும் இயந்திரம், மருந்து தெளிக்கும் யந்திரம் உட்பட இன்னும் பலவற்றுக்கு மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் சில காலமாக மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கினறனர்.
அத்துடன் இரவு நேரங்களில் வன விலங்குகளின் பாதிப்பிலிருந்து தமது சேனை பயிர்களைப் பாதுகாப்பதற்கு இரவு நேரங்களில் சேனைகளில் உள்ள தற்காலிக குடிசைகளில் தங்குவதாகவும் அவ்வேளைகளில் விளக்குகளையே பயன்படுத்துவதாகவும் (லந்தர்) அதற்கும் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே மண்ணெண்ணெய் மற்றும் எரிபொருட்களை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள உதவவேண்டும் என்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொண்டனர்.