யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு Heip For Smile இன் உதவிகள்.

85 0

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று
பழைய புனித நகர் கற்கோவளம் பருத்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கும்,
தெனியம்மன் கோவிலடி J/399 கிராம சேவையாளர் பிரிவு வியாபாரிமூலையைச் சேர்ந்தகிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட்ட 17 குடும்பங்களிற்கும், நெல்லியடி கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 26 குடும்பங்களிற்கும், கெருடாவில் கிழக்கு ஜே 387 பிரிவில் 31 குடும்பத்தினருக்கும் உலர் உணவு வழங்கப்பட்டது.