அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.
சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டினர். இந்த கலந்துரையாடல் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருந்தது. பெண்களின் தொழிற்படை ஈடுபாடு மற்றும் கீழ்மட்ட பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உட்பட சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து திருமதி சாங் டோங்மேய் விளக்கினார்.