சபாநாயகர் பதவி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

17 0

அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, அசோக ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது