மைத்திரி உரிமை கோர மாட்டார்”

26 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் எந்த உரிமையும் கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அவமதித்ததாகக் கூறி தனது கட்சிக்காரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு தீர்வு காணக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு தனது கட்சிக்காரர் உரிமை கோர மாட்டார் என அவர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்