பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறையை ஒழிப்பதற்கு எனது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (15) ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அந்த வகையில் பிரிடோ நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு செயல் திட்டங்களை இரண்டு வார காலமாக முன்னெடுத்து வந்தது.
இதேவேளை இருதியில் நிகழ்வை நேற்று ஹட்டன் அஜந்தா கேட்போர் கூடத்தில் பிரிடோ நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் வழிகாட்டலில், பிரிடோ நிறுவன நுவரெலியா மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி எஸ் யோகேஸ்வரி தலைமையில் மலையக பெண்களின் அரசியல் எழுச்சியே வன்முறைக்கெதிரான கேடயமாகும். என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள் எவ்வாறு தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.