நீதிமன்றம் வழங்கிய 12 வருட கடூழிய சிறை தண்டனை

22 0

2020 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,000 போதைப்பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.நீண்ட கால விசாரணையின் பின்னர், கொழும்பு 12, மிரானியா வீதியில் வசிக்கும் எம்.எப்.எம். ஃபர்ஸான் என்ற நபருக்கே இவ்வாறு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10, 2020 அன்று, பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,716 சட்டவிரோத போதைப் பொருட்களைக் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.