“பஸ் லலித்” அச்சுறுத்தல் – ஹங்வெல்ல பகுதியிலிருந்து வௌியேறும் வர்த்தகர்கள்

16 0

டுபாய் நாட்டில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கர என்ற “பஸ் லலித்”தின்  அச்சுறுத்தல்களால் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பல வர்த்தகர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவரது அச்சுறுத்தல் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“பஸ் லலித்” என்ற நபர் டுபாய் நாட்டிலிருந்து இந்நாட்டில் தனது குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகிறார்.

34 வயதான சந்தேகநபர் 5 கொலைகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார்.

இவர்களுக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டு கழுதை முகமூடியைப் பயன்படுத்தி ஹங்வெல்ல பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை சமூகத்தில் தீவிரமான விவாதத்திற்கு உள்ளானது.

அதற்குக் காரணம், குறித்த வர்த்தகர் கப்பம் கோரி வழங்கப்படாமையே என்பது தெரியவந்தது.