கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

12 0

கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தழுவ – கஜூவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 28 வயதுடைய இருவர் உயிரிழந்ததுடன், 22 வயதுடைய ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பாலாவியில் இருந்து கற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில், கற்பிட்டியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற லொறி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்