அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் விபத்து ; இளைஞன் பலி

15 0

அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் பண்டுகாபயபுர பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்பேவயிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஆவார்.

இதனையடுத்து பவுசர் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.