ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அகதிகளுக்கான உதவி உயர்ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச்செயலாளருமான ருவேந்திரினி மெனிக்திவெல பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் அகதிகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அர்ப்பணிப்பு மற்றும் கணிசமான பங்களிப்புகளுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை அலுவலகத்தின் தலைவர் சஞ்சிதா சத்தியமூர்த்தி இணைந்துகொண்டார்.
அத்துடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.