கல்கிசையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

14 0

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை  (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 20.75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.