ஜெமினிட்ஸ் விண்கல் மழை! – கண்டுகளிக்க இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

12 0
மேற்கு வானில் இன்று சனிக்கிழமை (14) ஒரு மணித்தியாலத்துக்கு சுமார் 150 விண்கற்கள் தென்படும் என விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

இந்த விண்கற்களை இலங்கை மக்கள் கண்டுகளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் இரவு முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (15) காலை வரை ஜெமினிட்ஸ் எனப்படும் விண்கல் மழை மேற்கு வானில் தென்படும்.

இந்த விண்கற்களை வெற்று கண்களால் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்தார்.