“அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார். இதன்மூலம் உக்ரைன்- ரஷியா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ரஷியாவை எதிர்த்து போரிய உக்ரைனுக்கும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை எதிர்த்து போரிட இஸ்ரேலுக்கும் அமெரிக்காதான் ராணுவ உதவி (ஆயுதம் வழங்குதல்) செய்து வருகிறது. போர் நிறுத்தம் ஏற்படடைவில்லை என்றால் டொனால்டு டிரம்ப் கட்டாயமாக ராணுவ உதவியை குறைப்பார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன அதிபர் ஜெலன்ஸ்கியை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். பின்னர் சமூக வலைத்தளத்தில் \”உக்ரைன்- ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்\” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஏவுகணைகளை ரஷியா மீது உக்ரைன் செலுத்துவது பைத்தியக்காரத்தனம் என டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் “உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அங்கே என்ன நடக்கிறது (அமெரிக்க ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்துவது) என்பது பைத்தியக்காரத்தனம். அது பைத்தியக்காரத்தனம்.ரஷியாவுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதோடு நான் மிகவும் கடுமையாக உடன்படவில்லை. நாம் இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம். நாம் போரை அதிகரித்து மோசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அனுமதிக்கக் கூடாது.நான் உக்ரைனை கைவிடமாட்டேன். நான் ஒரு ஒப்பந்தத்தை அடைய விரும்புகிறேன்.
இந்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருப்பதுதான் கைவிடாமல் இருப்பதற்கு ஒரே வழி.உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிகவும் சிறந்த திட்டம் உள்ளது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு உதவ ஒரு நல்ல திட்டம் இருப்பதாக நினைக்கிறேன், ஆனால் நான் அந்த திட்டத்தை அம்பலப்படுத்தத் தொடங்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு பயனற்ற திட்டமாக மாறிவிடும்\” என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.