காஷ்மீர் பிரச்னையானது ஐ.நா.,வால் தீர்வு காணப்படாத ஒன்று என்று பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பார்லிக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்து பேசினர். அப்போது நவாஸ் ஷெரிப் கூறியதாவது: காஷ்மீர் மக்களுக்கு நேர் வழியிலும், ராஜதந்திர வழியிலும் பாக்., ஆதரவு என்றும் உண்டு.
காஷ்மீர் பிரச்னையானது ஐ.நா.,வால் தீர்வு காணப்படாத விஷயம். ஆனால் ஐ.நா.,வின் தீர்மானத்தின்படி, சுய நிர்ணயம் செய்துகொள்வது காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமை. அனைத்து சர்வதேச அமைப்புகளின் முன்னிலையிலும், காஷ்மீர் விவகாரத்திற்காக பாக்., அரசு தொடர்ந்து எழுப்பும். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.