கனடாவில் ஒன்ராறியோவில் அறிமுகமாகும் புதிய சட்டம்

19 0

கனடாவில் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை பாதுகாக்கும் மற்றும் மீட்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நகராட்சிகள் மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு புதிய வளங்கள் மற்றும் நடைமுறை கருவிகளை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாக்கவும், வீடற்ற முகாம்களின் வளர்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிகடகை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படும் என அறியமுடிகிறது.