மொனராகலை- கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புத்தல – கதிர்காமம் வீதியில் நேற்று வியாழக்கிழமை (12) காலை காட்டு யானை ஒன்று வீதியில் பயணித்த லொறி ஒன்றை மோதி கவிழ்த்தி விபத்துக்குள்ளாக்கியுள்ளதாக கோனகங்ஆர பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது , லொறியின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த வயோதிப பெண் லொறியின் அடியில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சியம்பலான்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.