யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாக தமது கடமையை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன், வைத்திய கலாநிதி சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றினார்கள்.
மேலும், கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உள்ளகக் கணக்காய்வாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.