மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் பெற்றோர்கள் 150 பேர் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு 28.11.2024 அன்று மாவடிவேம்பு கிராமத்தில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட ஓரிடத்தில் நடைபெற்றது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்தார். பெங்கல் காற்றழுத்தம் காரணமாக பொருத்தமற்ற காலநிலை நிலவியது இதனால் உரிய காலத்தில் சிறப்பாகச் செய்ய முடியாமல்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டு வாகரை மண்ணில் இராணுவ புலனாய்வாளர்களின் கெடுபிடிகளின் மத்தியிலும் 200 மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு 30.11.2024 அன்று வாகரை மீனவர் சங்க கட்டடத்திற்கு வரவளைக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது வவுனதீவு இராணவ முகாம் தாக்குலில் வீரகாவியமான லெப்.கேணல் மதனா அக்காவின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
பெங்கல் காற்றழுத்தம் காரணமாக பொருத்தமற்ற காலநிலை நிலவியது இதனால் உரிய காலத்தில் சிறப்பாகச் செய்ய முடியாமல்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல மாவீரர் பெற்றோர்கள் 150 பேர் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு 25.11.2024 அன்று மகிழவெட்டுவான், நெல்லூர்,குறிஞ்சாமுனை,நாவல்த்தோட்டம் போன்ற கிராமங்களில் நடைபெற்றது அகவணக்கத்துடன் நிகழ்வு நடைபெற்றது. பெங்கல் காற்றழுத்தம் காரணமாக பொருத்தமற்ற காலநிலை நிலவியது இதனால் சிறப்பாகச் செய்ய முடியாமல்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் பெற்றோர்கள் 200பேர் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு 25.11.2024 அன்று வெல்லாவெளி மாவடிமுன்மாரி வால்கட்டு கிராமங்களில் நடைபெற்றது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்தார். பெங்கல் காற்றழுத்தம் காரணமாக பொருத்தமற்ற காலநிலை நிலவியது இதனால் உரிய காலத்தில் சிறப்பாகச் செய்ய முடியாமல்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.