டோக்கியோவில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4 அலகாக பதிவு

320 0

201607272313391246_54-magnitude-quake-shakes-Tokyo_SECVPFஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 55 முறையும் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.