விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெவில் சில்வா கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்குக் கிடைத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு சார்பாக செயற்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நெவில் சில்வா பல்வேறு குற்றச் செயல்களுக்கு உதவி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.