செல்வாநகர்க் கிராமத்தில் “Help for Smile” இன் உலருணவுப் பொதிகள்.(காணொளி)

109 0

யேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பங்களிப்புடன் “Help for Smile” அமைப்பினூடாக, கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட , செல்வாநகர்க் கிராமத்தில் இயற்கை அனர்த்தங்களால்ப் பாதிப்புற்ற மிக வறிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட எண்பத்தைந்து (85) குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. முதியோர்கள், பெண்தலமைத்துவம், நாளாந்த நிரந்தரமற்ற கூலித் தொழிலாளர்கள், அதிகளவு சிறுவர்களையுடைய குடும்பங்களென முன்னுரிமைப்படுத்தப்பட்ட வகையிலே இவ் உதவிகள் கையளிக்கப்பட்டபோது, அம்மக்கள் யேர்மனிய வாழ் எமது உறவுகளுக்கும், Help for Smile அமைப்பினருக்கும் தமது நன்றியினை வெளிப்படுத்தினர்.