அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டதுடன் மானிய விலையில் அரிசி வழங்கும் செயற்பாடு சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் என்பவற்றின் தலையீட்டினால் நேற்று (09) முதல் செயற்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி சதொச விற்பனை நிலையத்தினூடாக நிவாரண விலையில் அரிசி விநியோகம் தற்போது இடம்பெறுவதுடன், நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், தேங்காய் ஒன்று 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், அவசியமான எண்ணிக்கையில் இன்று முதல் கண்டி சதொச விற்பனை நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
மானிய விலைக்கு அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விற்பனை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசியமான பொருட்களின் எண்ணிக்கை இன்று, கண்டி சதொச விற்பனை நிலையத்தினூடாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.