டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது என்றும்
இஸ்ரேல் எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக் கரம் நீட்டுகிறோம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரியாவில் ஆசாத்தின் இரு தசாப்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை நெதன்யாகு வரவேற்றுள்ளார்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். ஆசாத்தின் ஆட்சி, டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரியளவிலான ஆபத்துகளும் உள்ளன.
எங்களுடைய எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக் கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவுக்கரம் நீட்டுகிறோம்”- என்றார்