கண்டி, மெனிக்கின்ன நகரத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவரது புதல்வன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர் இத்தமல்லியகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் ஆவார்.
காயமடைந்தவர் மெனிக்கின்ன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.