நுவரெலியா டிப்போவில் காவலாளி கொலை, பணம் கொள்ளை! – 3 பேருக்கு விளக்கமறியல்

10 0

நுவரெலியா, இ.போ.ச டிப்போவில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை சிலர் கொலை செய்துவிட்டு, சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை டிசம்பர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியா லங்கம டிப்போவில் பணியாற்றும் காசாளர் (வயது 55), சாரதி  (வயது 40), சாரதியின்    நண்பர் (வயது 36) ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பதுளை, மஹவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 6ஆம் திகதி நுவரெலியா டிப்போவில்   பணிபுரிந்த காவலாளி ஒருவரை சிலர் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த 10 இலட்சத்து 52 ஆயிரத்து 167 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயது நபரே கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இக்கொலை மற்றும் பணம் கொள்ளைச் குற்றங்கள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.